Padma Bhushan award announcement to late actor Vijayakanth

நாளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமானவிஜயகாந்துக்குபத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்தசேவையாற்றிதயற்காகஅவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞர் பத்திரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியமுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment