ADVERTISEMENT

'குடியுரிமை விவகாரம்... புறக்கணித்த முக்கிய கட்சிகள்' அசராத கங்கிரஸ் கட்சி!

08:06 PM Jan 13, 2020 | suthakar@nakkh…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டத்தை வெளிப்படுத்த நினைத்த காங்கிரஸ் கட்சி, இதுகுறித்த ஆலோசிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்திற்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.


ADVERTISEMENT


இந்த கூட்டம் இன்று நடந்த நிலையில், பல முக்கிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துள்ளவில்லை. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள 20 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT