police complaint against Annamalai for defaming Rahul Gandhi and Sonia Gandhi

Advertisment

காங்கிரஸ் கட்சி தலைவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகார் மனுவில், காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் முன்னாள் தேசியத் தலைவர்கள் சோனியா காந்தி எம்.பி மற்றும் ராகுல் காந்தி எம்.பி மீதும் பொதுவெளியில் அவதூறான காணொளி வெளியிட்ட தமிழக பாரதியஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தேசிய ஊடகப்பிரிவு தலைவர் அமித் மால்வியா மற்றும் தமிழக பாஜகவின் சமூக ஊடக பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பில் மனு கொடுக்கப்பட்ட இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன், திருச்சி கிழக்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ஜெயம் கோபி, செல்வரங்கராஜன், சாகுல் ஹமீது, கார்த்திகேயன் தர்வேஷ், கண்டோன்மென்ட் வளன் ரோஸ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.