ADVERTISEMENT

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல் - டீசல் மீதான வரி குறைக்கப்படுமா - நிர்மலா சீதாராமன் பதில்!

11:40 AM Feb 23, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஒரு பேரல் 96 டாலருக்கு மேல் விற்பனையாகி வருகிறது.

இதனால் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இந்தியாவிலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வரி குறைப்பது தொடர்பாக முடிவெடுக்கையில் அதை மக்களுக்கு அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு, எரிபொருளுக்கான வரி குறைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது; கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு கவலைக்குரிய சூழ்நிலை. உக்ரைன் பிரச்சனையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வு வேண்டும் என நாம் குரல் கொடுத்து வருகிறோம். உக்ரைன் பிரச்சனை கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரியை குறைப்பது முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று. கச்சா எண்ணெய் விலை உயர்வின் போக்கு எப்படி செல்கிறது என நாம் பார்க்க வேண்டும்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் தீபாவளிக்கு முன்னதாக எரிபொருளுக்கான வரியை குறைத்தார். உலகளாவிய விநியோகப் பிரச்சினைகளால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள் விலையில் என்ன செய்யப்போகின்றன என்பது குறித்து என்னால் பதிலளிக்க முடியாது. எரிபொருள் விலை மீதான கலால் வரி குறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை வரும்போது, அதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவிப்போம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT