ADVERTISEMENT

அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று... டெல்லியில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி!

03:56 PM Dec 14, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தற்போது ஆந்திரா, கேரளாவிலும் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. டெல்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களைப் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 45இல் இருந்து 49 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒமிக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT