OMICRON

Advertisment

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டஒமிக்ரான்வகை கரோனா, தற்போது 91 நாடுகளில்பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்குஒமிக்ரான்வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியாவிலும்101 பேருக்குஒமிக்ரான்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (17.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி 14 லட்சம் பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர், "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும். பிரான்சில் 65,000 வழக்குகள் (ஒரேநாளில்) பதிவாகியுள்ளன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர் சந்திப்பில் பேசியஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர்பல்ராம் பார்கவா, "இது அத்தியாவசியமற்ற பயணங்கள், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம். கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்வது முக்கியம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.