ADVERTISEMENT

என்.டி.ஆரின் மகன் கார் விபத்தில் மரணம்

08:20 AM Aug 29, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, தெலுங்கானா நல்கொண்டாவில் ஏற்பட்ட கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

ADVERTISEMENT

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ஹரிகிருஷ்ணா நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஆன இவர், 2008 ஆம் ஆண்டில் அவர் ராஜ்ய சபைக்கான தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தேர்வானார். 2.9.1956 பிறந்த நந்தமுரி ஹரிகிருஷ்ணா, நந்தமுரி தாராகா ராமா ராவ்-ன் 4வது மகன் ஆவார். நடிகர் பாலகிருஷ்ணா இவரது சகோதரர்.

லஹிரி லஹிரி லஹிரிலோ என்ற படத்தில் நடித்த ஹரிகிருஷ்ணா, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT