anushka

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். 'வானம்' படத்தை இயக்கிய கிருஷ் இப்படத்தை இயக்குகிறார். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும், ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. இந்நிலையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.