ADVERTISEMENT

கூட்டணி ஒகே... முதல்வர் வேட்பாளர் யார்? - குழப்பத்தில் பாஜக கூட்டணி!

05:16 PM Mar 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இன்று தனியார் ஹோட்டலில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க பொறுப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க சேர்ந்து புதுச்சேரியில் தேர்தலைச் சந்திக்கிறது. இதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள், பா.ஜ.க., அ.தி.மு.க அணி 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி, அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும்" என்றார்.

அதேசமயம் 'முதலமைச்சர் வேட்பாளர் யார்?' என அறிவிக்கக் கோரி என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஆனால், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் எதையும் சொல்லாமல் சென்றுவிட்டதால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இந்தச் சந்திப்பின் போது, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT