ADVERTISEMENT

"சி.பி.ஐ. சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை"- ப.சிதம்பரம்! 

06:44 PM May 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவை தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, டெல்லி, மும்பை. ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை (17/05/2022) முதலே அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் ப. சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சி.பி.ஐ. நடத்திய சோதனையில் தமது வீட்டில் இருந்து எதனையும் கண்டறியவில்லை; எதையும் பறிமுதல் செய்யவில்லை. சி.பி.ஐ. காவல்துறையினர் தம்மிடம் காட்டிய முதல் தகவல அறிக்கையில் தமது பெயர் இடம் பெறவில்லை. சோதனை நடத்தப்பட்ட நேரம் நகைப்பிற்குரியது என்பதை தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 250 சீனர்கள் சட்ட விரோதமாக விசா பெற அவர்களிடம் இருந்து கார்த்தி சிதம்பரம் ரூபாய் 50 லட்சம் பெற்றதாக, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT