ADVERTISEMENT

"வங்கிக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

11:50 AM Feb 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், இன்று (10/02/2022) செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022- 2023 ஆம் நிதியாண்டில் 7.8% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ) 10 ஆவது முறையாக மாற்றமில்லை; தற்போது இருக்கும் 4% என்ற நிலையே தொடரும். பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆக தொடரும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும். உணவு பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) கணிப்பின்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT