ADVERTISEMENT

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு!

09:11 PM May 20, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலானவற்றை விடுவிக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டுக்கான தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.


இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT