ADVERTISEMENT

பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை கைது செய்தது என்ஐஏ

02:30 PM Sep 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி முகாம் நடத்துதல், தடை செய்த அமைப்புகளில் ஆட்களைச் சேர்த்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று (22/09/2022) அதிகாலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தமிழகத்தின் கோவை, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, ஆந்திராவில் 5 பேரும், அசாமில் 9 பேரும், டெல்லியில் 3 பேரும், கர்நாடகாவில் 20 பேரும், கேரளாவில் 22 பேரும் மத்திய பிரதேசத்தில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 20 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், தமிழகத்தில் 10 பேரும், உத்தரபிரதேச மாநிலத்தில் 8 பேரும் என மொத்தம் 106 பேரையும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினருடன் இணைந்து மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சோதனை நடைபெறும் வரும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் சோதனைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT