ADVERTISEMENT

பதஞ்சலிக்கு அடுத்த அடி!!! பின் வாங்கிய பாபாராம்தேவ்

05:27 PM Jun 02, 2018 | vasanthbalakrishnan

கிம்போ செயலி வாயிலாக தொழில்நுட்ப துறையில் முதல் முறையாக கால் பாதித்துள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். பிரபல குறுஞ்செய்தி செயலியான "வாட்சப்பை அழிப்பதற்காக" தொடங்கப்படுவதாக கூறப்பட்ட யோகா குரு பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து அது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாபா ராம்தேவின் பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனம், கடந்த வியாழக்கிழமை தற்போது சந்தையில் உள்ள குறுஞ்செய்தி செயலிகளுக்கு போட்டியாக 'கிம்போ' என்னும் செயலியை "உள்நாட்டிலேயே" தயாரிக்கப்பட்டதென்று கூறி வெளியிட்டது ஆனால், அந்த செயலி வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே, பாதுகாப்பானது அல்ல என்றும், அச்செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்களை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் ''அந்த செயலியில் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், பொதுமக்களின் ஆர்வத்தை அறிவதற்காக ஒருநாள் மட்டும்தான் செயலியை வெளியிட்டதாகவும்'' கூறியுள்ளது. "உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவும் முதன்மையான இடத்தை வகிக்க முடியுமென்பதை கிம்போ செயலி நிரூபிக்கும்" என்று பதஞ்சலி ப்ராடெக்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் டிஜாரவாலா கூறியுள்ளார்.

"பொதுமக்களின் எதிர்வினையை தெரிந்துகொள்வதற்காகத்தான் கிம்போ செயலியை ஒருநாள் மட்டும் வெளியிட்டோம். அதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கிம்போ செயலியை விரைவில் முறையாக வெளியிடுவதற்கு முடிவுசெய்துள்ளோம், அப்போது செயலியின் பாதுகாப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே சோப்பு-ஷாம்பூ முதல் நூடுல்ஸ் வரை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT