ADVERTISEMENT

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் குறித்து பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு...

12:41 PM Feb 05, 2020 | kirubahar@nakk…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழங்கில் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிட்டபடி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT