Skip to main content

அயோத்தி தீர்ப்பு குறித்து ஒவைசி கருத்து...

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

 

owaisi about ayodhya verdict

 

 

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளஇந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாசுதீன் ஒவைசி, "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அது தவறிழைக்காது என கூற முடியாது. அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தானமாகத் தேவையில்லை. 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கிறோம். அதனை ஏற்கும் நிலையில் இருக்க விரும்பவில்லை.

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை. பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியைச் சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டு உணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை - அயோத்தி இடையே நேரடி விமான சேவை!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Direct flight service between Chennai - Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பகத்ர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்  ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று (01.02.2024) முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 03.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதே விமானம் மறுமார்க்கமாக மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 06.20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.