ADVERTISEMENT

“என் மகள்கள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும்” - குஜராத் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பில்கிஸ் பானு

02:44 PM Apr 27, 2019 | tarivazhagan

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கீஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இவருக்கு தற்போது இழப்பீடாக ரூ. 50 இலட்சம், தங்குவதற்கென இடம், ஒரு வேலை ஆகியவற்றை குஜராத் அரசு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2002-ம் ஆண்டு நடைபெற்ற அந்த கலவரத்தில் பில்கீஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர். அதில் அவரின் மூன்றரை வயது குழந்தையும் அடங்கும். அதேபோல் அப்போது அவர் கருத்தரிந்தார் இருந்தார். மேலும் இந்த சம்பவம் நடைபெற்றபோது அவருக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது போதாது, தனக்கு மேலும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜனவரி 21, 2008-ல் சிறப்பு நீதிமன்றம் பானுவை பலாத்காரம் செய்து குடும்பத்தினர் 7 பேர் கொன்றதற்காக 11 பேருக்குச் ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால் சில போலீஸ் அதிகாரிகள் மருத்துவர்கள் உட்பட 7 பேரை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம். ஆயுள் தண்டனை பெற்ற பலாத்கார குற்றவாளிகள் அனைவரும் தலா ரூ.55,000 பில்கிஸ் பானுவுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

பில்கிஸ் பானு இது குறித்து கூறிய போது, “எனக்கு நீதிதான் வேண்டும், பழிக்குப் பழி அல்ல. என் மகள்கள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்போது இந்தத் தீர்ப்பின் மூலம் எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை பிறக்கிறது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT