ADVERTISEMENT

மும்பை அணிக்கு 'சாம்பியன்ஷிப்...'' போராடி வீழ்ந்தது சென்னை...

11:48 PM May 12, 2019 | kalaimohan

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ADVERTISEMENT

12வது ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று நடந்த இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

ADVERTISEMENT

2013, 2015, 2017 ஆம் ஆண்டு என தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.

ஹைதராபாத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்களை இலக்காக வைத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக போல்லார்டு 41 ரன்களையும், குயின்டன் டி காக் 29 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 80 ரன்களையும், பிளஸ்சி 26 ரன்களையும் எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது சென்னை அணி.

இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது இடம் பிடித்துள்ள சென்னை அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT