ADVERTISEMENT

கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகள் யாரைத் தாக்கும்?

07:48 AM May 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பொதுமக்களை அச்சுறுத்திவரும் நிலையில், மற்றொருபுறம் கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோய் பரவிவருவது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் 8000க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பீகார் தலைநகர் பாட்னாவில் 4க்கும் மேற்பட்டோர் வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்!

கண் பார்வை இழப்பு, கண்களில் வீக்கம் வலி.
தலைவலி.
கண் மற்றும் மூக்கைச் சுற்றி சிவத்தல்.
வாந்தி, மனநிலை மாறுபாடு.

வெள்ளை பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்!

நுரையீரல் பாதிப்பு,
இருமல், உடல் வலி,
நெஞ்சு வலி,
மூச்சு விடுவதில் சிரமம்.

மஞ்சள் பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்!

உடல் சோர்வு,
பசியின்மை,
உடல் எடை குறைதல்,
உடல் உறுப்புகள் செயலிழத்தல்.

கருப்பு பூஞ்சை நோய் யாரைத் தாக்கும்?

கரோனா பாதித்து ஸ்டீராய்டு அதிகம் எடுத்துக்கொண்டவர்கள்,
அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து கொண்டவர்கள்,
சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள்.

வெள்ளை பூஞ்சை நோய் யாரைத் தாக்கும்?

நுரையீரல் பாதிப்பு கொண்டவர்கள்,
ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சைப் பெறுபவர்கள்,
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்.

மஞ்சள் பூஞ்சை நோய் யாரைத் தாக்கும்?

சுகாதாரமில்லாதவர்கள் (உணவு உட்பட),
மோசமான ஆக்சிஜன் பயன்பாடு கொண்டவர்கள்,
பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளை அதிகம் உட்கொள்பவர்கள்.

கருப்பு பூஞ்சை நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ஸ்டீராய்டை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

வெள்ளை பூஞ்சை நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கழிவறையைச் சுத்தமாக வைத்திருத்தல்;
ஆரோக்கியமான உணவு பழக்கம்;
மாஸ்க், தனிமனித இடைவெளி.

மஞ்சள் பூஞ்சை நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கெட்டுப்போகும் நிலையில் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
காற்று, சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு இருக்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT