Published on 28/05/2021 | Edited on 28/05/2021

கருப்பு பூஞ்சை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பணிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மருத்துவ கல்வி இயக்குநரக தலைவர் தலைமையிலானப் பணிக் குழுவில் 13 மருத்துவ வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். குழுவின் உறுப்பினர்களாக டாக்டர் மோகன் காமேஸ்வர், டாக்டர் பாபு மனோகர், டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், டாக்டர் ராமசுப்பிரமணியன், டாக்டர் அனுபாமா நித்யா, டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.