ADVERTISEMENT

"அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்" - பிரதமர் மோடி...

03:22 PM Jul 11, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிருக்கும் 'லீ செய்ன் லூங்'கிற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் இன்னும் 10 மாதங்களில் முடிவடையும் நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் லீ. கரோனா வைரஸுக்கு மத்தியில் நேற்று நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு முகக் கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், வாக்களிக்கக் கூடுதலாக இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று மாலை தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதில், மக்கள் செயல் கட்சி, போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு வாழ்த்துகள். அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு சிங்கப்பூர் மக்களுக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT