ADVERTISEMENT

இந்தியாவை வாட்ச்மேன்களின் தேசமாக்க முயற்சிக்கிறார் மோடி...!

03:24 PM Mar 20, 2019 | Anonymous (not verified)

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற காலத்தை மாற்றி எல்லோரும் வாட்ச்மேன் என்ற நிலைக்கு கொண்டுபோயிருக்கிறார் மோடி என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நான் வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும், கருப்புப்பணம் ஒழிந்துவிடும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்றெல்லாம் ஆவேசமாக பேசி வாக்கு வாங்கி பிரதமரானவர் மோடி. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த சாதனை என்ன என்று சொல்ல முடியாததால் சமீப காலமாக, தன்னை ஒரு ஏழைத்தாயின் மகன் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவன் என்பதால் தன்னை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் அழுது புலம்பத் தொடங்கினார்.

இந்நிலையில்தான் ராணுவத்துக்கு வாங்கிய ரஃபேல் விமான பேரத்தில் பிரதமரே நேரில் தலையிட்டு, முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாக்கி, அனில் அம்பானி 18 நாட்களுக்கு முன் பதிவுசெய்த கம்பெனிக்கு சாதகமாக பேரத்தை முடித்தார் என்று ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பேரத்தின் மூலம் மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அனில் அம்பானிக்கு எடுத்துக் கொடுத்துவிட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது.

எனவே, காங்கிரஸ் தலைவர் பிரதமரே ஒரு திருடனாக இருக்கிறார் என்றார். ஆனால், தன்னை இந்தியாவின் வாட்ச்மேன் என்று மோடி கூறினார். உடனே, வாட்ச்மேனே திருடனாகிவிட்டார் என்று ராகுல் கூறினார்.

மோடி ஒரு திருடன் என்ற கோஷம் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், மோடி தனது பெயரையே வாட்ச்மேன் மோடி என்று மாற்றிக்கொண்டார். அதுமட்டுமின்றி எல்லோரும் தங்களை வாட்ச்மேனாக கருத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். உடனே அவருடைய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன் வாட்ச்மேன் என்ற அடைமொழியை இணைத்திருக்கிறார்கள். இதையே ஒரு இயக்கமாக மாற்ற மோடி விரும்புகிறார் என்றும், 25 லட்சம் வாட்ச்மேன்களிடம் பேசப்போகிறார் என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில்தான் பிள்ளைகளை வாச்மேனாக்க விரும்புகிறவர்கள்தான் மீண்டும் மோடிக்கு வாக்களிப்பார்கள் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கிண்டலடித்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “இந்தியாவையே வாட்ச்மேன் தேசமாக மாற்ற மோடி விரும்புகிறார். அப்படிப்பட்ட வாட்ச்மேன்களில் ஒருவராக உங்கள் பிள்ளைகளை ஆக்க விரும்பினால் நீங்கள் மோடிக்கு மீண்டும் வாக்களியுங்கள். ஆனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் ஆக்கவே விரும்புவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT