ADVERTISEMENT

"கொள்கைகளை வகுப்பதில் ஆசிரியர்களுடனான உரையாடல்கள் உதவியது" - பிரதமர் மோடி

01:35 PM May 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காந்தி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நட்டி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக அகில் பாரதிய சிக்‌ஷா சங் ஆதிவேஷன் என்ற ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தேசிய அளவில் கொள்கைகளை வகுப்பதில் ஆசிரியர்களுடனான எனது உரையாடல்கள் எங்களுக்கு உதவியது. புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்குவதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப புதிய வாய்ப்புகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டே புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. நமது கல்வி முறையின் மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்களும் குழந்தைகளும் மாறி வருகிறார்கள். இந்த மாற்றத்தின் மூலம் நாம் எப்படி முன்னேறுவோம் என்பது தான் முக்கியம்" என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT