ADVERTISEMENT

"வாழ்வை எளிய முறையில் அமைத்து கொள்வதற்கான நம் முயற்சியின் அடையாளம்" - பிரதமர் மோடி பேச்சு...

12:29 PM Aug 10, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை, அந்தமான் இடையேயான கடல்வழி கண்ணாடி இழை இணைப்பு திட்டம், மக்களின் வாழ்வை எளிய முறையில் அமைத்து கொள்வதற்கான நம் முயற்சியின் அடையாளம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்தமான் தீவை இந்தியாவின் பிற பகுதிகளோடு அதிவேக இணையச் சேவை மூலம் இணைப்பதற்கான கடல்வழி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தைக் கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி. சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிகோபர், லாங் தீவு, ரங்கத் தீவு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த திட்டம் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று காணொலி காட்சி வழியாக இத்திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே, கடலுக்கு அடியில் 2,300 கி.மீ. நீளத்திற்குக் கண்ணாடி இழை வடம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது.

ஆழ்கடல் ஆய்வுகள், வடத்தின் தரம் பராமரிப்பு மற்றும் சிறப்புக் கப்பல்களைக் கொண்டு வடம் பதிப்பது என்பது கடினமான வேலை. நாட்டின் பிற பகுதிகளுடன் அந்தமான் நிகோபரை இணைக்கும் இந்த திட்டம், வாழ்க்கையை எளிய முறையில் அமைத்து கொள்வதற்கான நம் முயற்சியின் அடையாளம் ஆகும். ஆன்லைன் வகுப்புகள், சுற்றுலா, வங்கி சேவை, ஷாப்பிங் என அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இனி இதன்மூலம் பயன் பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT