ADVERTISEMENT

டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தானை சாடிய மோடி!

12:37 PM Sep 23, 2019 | suthakar@nakkh…

நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்காவில் ஒருவாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நலமா மோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார்.


ADVERTISEMENT


நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை தரத்தை அளிப்பதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. புதிய இந்தியா வேகமாக உருவாகி வருகிறது. அமெரிக்காவுக்கும் - இந்தியாவுக்கும் இடையே நட்புறவு பலமடைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் பிரதமர் மோடி கூறினார். முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் அமெரிக்க அதிபர் எளிதாக அணுகக்கூடியவராக இருக்கிறார் என்றும், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் என்றும் பிரதமர் மோடி புகழ்ந்தார். அந்த கூட்டத்தில் பாகிஸ்தானை மோடி கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT