ADVERTISEMENT

"ஒரே தேசம், ஒரே தேர்தல்" - பிரதமர் மோடி பேச்சு...

05:36 PM Nov 26, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பதே தற்போதைய தேவை எனப் பேசியுள்ளார்.

பாஜகவின் முந்தைய ஆட்சிக் காலத்திலிருந்து அக்கட்சியின் மிகமுக்கியமான திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது 'ஒரே தேசம், ஒரே தேர்தல்'. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, அனைத்து மாநிலங்களில் சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் நோக்கில், பா.ஜ.க இந்தத் திட்டத்தை முன்னிறுத்தி வருகிறது. ஆனால், இதற்கான தகுந்த வசதிகள், பொருளாதாரச் சூழல்கள், ஆட்சி மாற்றங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பதே தற்போதைய தேவை எனப் பேசியுள்ளார்.

அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, "ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல இப்போதைக்கான தேவை இதுவே. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பது, நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்குத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்ய முடியும்." எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT