ADVERTISEMENT

"அவர்களின் தியாகத்தை இந்தத் தேசம் மறக்காது" - எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி...

03:25 PM Jun 25, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

1975 ஆண்டு அவசரநிலைக்கு எதிராக போராடியவர்களை இந்தத் தேசம் மறக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தாடுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும், இரவோடு இரவாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பத்திரிகை சுதந்திரம், உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டன. 1977 மார்ச் 21 வரை இந்த அவசரநிலை நாடு முழுவதும் நீடித்தது.

இந்த அவசர நிலை கொண்டுவரப்பட்டு இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "45 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைக் காக்க, அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய மக்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நான் வணங்குகிறேன். அவர்களின் தியாகத்தை இந்தத் தேசம் மறக்காது. மக்கள் தங்களின் தேவைகளை, உரிமைகளை மறந்து கடந்த 1977-ஆம் ஆண்டு தேர்தலில் எமர்ஜென்சியை நீக்க வாக்களித்தார்கள். ஜனநாயகத்தைக் காக்க கடந்த 1977-ஆம் ஆண்டு அந்தத் தேர்தல் நடந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT