ADVERTISEMENT

"மழைநீர் சேகரிப்பு" திட்டத்தை கட்டாயமாக்கும் மத்திய அரசு?

02:42 PM Jun 28, 2019 | santhoshb@nakk…

இந்தியாவில் நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 'ஜல் சக்தித்துறை' அமைச்சகம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் செயல்பாடுகள் முழுவதும் நீர்வளத்தை சார்ந்தே இருக்கும். அதே போல் நீர்வளத்தை அதிகரிப்பது மற்றும் நீரை சேமிக்க தேவையான புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கையில் ஜல் சக்திச்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 255 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதனைத் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பை செயல்படுத்தும் வகையில் ஜல சக்தி திட்டத்தை ஜூலை 1 முதல் மத்திய அரசு தொடங்க உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு மத்திய துறைகளில், இணை அல்லது கூடுதல் செயலர் அந்தஸ்தில் இருக்கும் 255 ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரத்தில் ஒட்டுமொத்தமாக, நிலத்தடி நீர் சரியும் நிலையில் உள்ள 313 பகுதிகளிலும், நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்பட்ட 1,186 பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைந்து போன 94 பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரச்சாரம் தென்மேற்கு பருவமழையைப் பெறும் தென் மாநிலங்களில் ஜூலை 1 தொடங்கி, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை, ஜல் சக்தி திட்டத்தின் கீழ் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். வடகிழக்குப் பருவமழையின் போது அக்டோபர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.


மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கான இந்த திட்டம் https://indiawater.gov.in/imisreports/IMISReportLogin.aspx என்ற இணைய தளத்தின் மூலம், மொபைல் அப்ளிகேசன்களை பயன்படுத்தி நேரடியாகக் கண்காணிக்கப்படும் என ஜல் சக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே ஜல் சக்தித்துறை அமைச்சகத்திற்கென்று புதியதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தின் முகவரி: https://ddws.gov.in/# ஆகும். இதன் மூலம் மத்திய அரசு "மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT