கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தை அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் சிதம்பரம் கோட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள், பொது நல அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தி மழைநீரை சேகரிப்போம், மழைநீர் உயிர் நீர் என கோஷங்களை எழுப்பியவாறு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.