ADVERTISEMENT

'செப்டம்பரில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி வசூல்'- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

04:54 PM Oct 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செப்டம்பர் மாதம் ரூபாய் 95,480 கோடி ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வசூலில், மாநில ஜி.எஸ்.டி ரூபாய் 23,131 கோடி, மத்திய ஜி.எஸ்.டி ரூபாய் 17,741 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல், இறக்குமதி ஜி.எஸ்.டி ரூபாய் 47,484 கோடியும், செஸ் வரியாக ரூபாய் 7,124 கோடியும் வசூலாகியுள்ளது. இந்த அனைத்து வரிகளையும் சேர்த்து, செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூபாய் 95,480 கோடி ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 86,449 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்ட நிலையில், செப்டம்பரில் ரூபாய் 95,480 கோடி வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT