ADVERTISEMENT

இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு நாள் - ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து மெஹபூபா முப்தி கருத்து...

01:08 PM Aug 05, 2019 | kirubahar@nakk…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, "இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு நாள்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT