ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் செல்லும்!- தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்!

09:03 AM Oct 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காலத்தில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக நடத்தும் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டதுதான் என்றும், செல்லுப்படியாகக் கூடியது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், 'தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம். கரோனா பேரிடர் முடிந்த பின்னர் கல்லூரிகள் திறக்கப்படும்போது, செய்முறை (பிராக்டிகல்) மற்றும் கிளினிகல் பயிற்சி வகுப்புகளை சமன் செய்து கொள்ளலாம்.

மருத்துவக் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியது, தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில், அயல்நாட்டு மருத்துவ பல்கலைகழகங்கள் நடத்தும் வகுப்புகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆகஸ்ட் 13- ஆம் தேதி அளித்த விளக்கமாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT