ADVERTISEMENT

நான்கு மாதங்களில் இரண்டு முறை உயர்ந்த கார்களின் விலை..! காரணம் என்ன..?

10:45 AM Apr 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, நான்கு மாதங்களுக்குள் தனது நிறுவனத்தின் கார்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. மாருதி ஆல்டோ துவங்கி, மாருதி கிராண்ட் விட்டாரா வரை மொத்தம் 15 மாடல் கார்களை மாருதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துவக்க மாடலான மாருதி சுசூகியின் விலை 3 முதல் 4.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் உயர்தர காரான மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் விலை 24.5 இலட்சமாக உள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனங்களின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை 1.6% அதாவது 22 ஆயிரம் வரை உயர்த்தப்படுவதாக மாருதி அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாடல்களின் விலை உயர்கிறது என்பதை சரியாக குறிப்பிடவில்லை. கார் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தினால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT