தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்விலையைமாதந்தோறும் மாற்றம் செய்துகொள்ள எரிவாயு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், கடந்த பல மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித விலையேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 50 ரூபாய் அதிகரித்துள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட இன்டேன் சிலிண்டர் விலை ரூபாய் 1,068.50-ல் இருந்து ரூபாய் 1,118.50-ஆக உயர்ந்துள்ளது. சில மாதங்களாக விலையேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரித்திருப்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.