ADVERTISEMENT

தொடரும் வன்முறை: “44 நாட்களாகியும் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்" - காங்கிரஸ் கடும் தாக்கு

05:42 PM Jun 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 4 நாள் பயணமாக கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்கு சென்றார். அப்போது அவர் பலரையும் சந்தித்து பேசினார். இதையடுத்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசுகையில், "கலவரத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் செல்ல 25 நாட்கள் எடுத்துக் கொண்டார். வன்முறை தொடங்கி 44 நாட்கள் ஆகியும் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்க காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT