ADVERTISEMENT

கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்யாத மம்தா!

11:04 AM Apr 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், ஐந்து கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையிலும், அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு குறையவில்லை.

இந்தநிலையில், மேற்கு வங்கம் உட்பட இந்தியா முழுவதும், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் தாங்கள் நடத்த இருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் கைவிட்டது. ராகுல் காந்தி, தனது மேற்கு வங்க பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்தார். இந்தநிலையில், தற்போது மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்யமாட்டார் என திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் பிரச்சாரத்திற்கான இறுதிநாளில் அடையாள கூட்டம் மட்டும் நடைபெறும் எனவும், மம்தாவின் எல்லா பொதுக்கூட்டத்தின் நேரமும் 30 நிமிடங்களாக சுருக்கப்படுவதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT