ADVERTISEMENT

நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்; பாஜக - மம்தா மோதல்!

07:02 PM Jan 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் வரும் ஜனவரி 23 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில் மத்திய அரசு, நேதாஜியின் பிறந்தநாள், 'பராக்ரம் திவாஸ்' (பராக்கிரம ஜெயந்தி) எனும் பெயரில் கொண்டாடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் பராக்ரம் திவாஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி, மத்திய அரசு நேதாஜியை வாக்கு அரசியலுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நேதாஜியின் பிறந்தநாள், தேஷ் நாயக் திவாஸாக (தேச நாயக ஜெயந்தி) அனுசரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை நெருங்கும் நேரத்தில், இரு கட்சிகளும் நேதாஜியை வைத்து அரசியல் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT