ADVERTISEMENT

மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் ட்விஸ்ட்... முதலமைச்சரானார் தேவேந்திர பத்னாவிஸ்...

08:12 AM Nov 23, 2019 | santhoshkumar

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT