ADVERTISEMENT

பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.545 கோடி யெஸ் வங்கியில் டெபாசிட்!

05:53 PM Mar 07, 2020 | suthakar@nakkh…

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' வாராக் கடன் அதிகாரிப்பால் நிதி சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. வாராக் கடன்களின் அளவு மிக அதிக அளவு சென்றதால் அந்த வங்கியின் நிதி அளவு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் அதனை தற்போது ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் யெஸ் வங்கி இனி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. மேலும் அடுத்த முப்பது நாட்களுக்கு அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT


இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி வெளியானதில் இருந்து வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் குவிந்து தங்களின் பணத்தை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திடீர் திருப்பமாக யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த வங்கியில் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.545 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT