ADVERTISEMENT

புல்லை வேட்டையாடும் சிங்கம்... கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

01:06 PM Aug 29, 2019 | suthakar@nakkh…

அஸ்ஸாம் மாநிலத்தில் ரேவானா மாவட்டத்தில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் ஒரு சிங்கம் புற்களை நன்றாக ருசித்து சாப்பிடுவதை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் பல பின்னோட்டங்களை இட்டு வருகின்றனர். சிங்கம் புல் சாப்பிடுவது தொடர்பாக பலர் தங்களின் கருத்துக்களை கிண்டலாக தெரிவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அதில் ஒருவர் சிங்கத்திற்கு உடம்பு சரியில்லை என்று கூறுகிறார். இன்னொருவர் அது ஒரு சைவ சிங்கம் என கேலி செய்கிறார். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று கூறுவார்கள். ஆனால் சிங்கம் சாப்பிடுமோ என்னவோ? என்று கிண்டலாக தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர் சிங்கம் வெஜிடேரியனாக மாறியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். சிங்கம் புல்லை திங்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT