
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. மேலும், ஐந்து நெருப்பு கோழிகளும் உயிரிழந்துள்ளன.
'கவிதா' என்கிற 19 வயது பெண் சிங்கம் வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், பூங்காவில் இருந்த ஐந்து நெருப்பு கோழிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளன. இறப்பிற்கான காரணம் குறித்து அறிவதற்காக உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வெளிவந்தவுடன் நெருப்பு கோழிகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.