ADVERTISEMENT

129 ஆண்டுகளுக்கு பிறகு உக்கிரம்... தென்னை மரத்தை எரித்த 'நிசர்கா' புயல்!

08:45 PM Jun 04, 2020 | suthakar@nakkh…



தென்மேற்கு பருவமழையின் தொடக்கமாக அமைந்த நிசர்கா புயல் குஜராத்தை நோக்கி செல்லலாம் என முதலில் கணிக்கப்பட்ட நிலையில், பின்னர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு அதன்படி, நேற்று முன்தினம் மதியம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் அலிபாக் அருகே கரையை கடந்தது. கடந்த 129 ஆண்டுகளில் மஹாராஷ்ட்ரா மாநிலம் சந்தித்த முதல் வெப்பமண்டல ஜூன் மாத புயலான இது, அம்மாநில கடற்கரை பகுதிகளை புரட்டிபோட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை வீசிய பலத்த காற்று மரங்கள், மின்கம்பங்கள், வீட்டுக்கூரைகள் ஆகியவற்றை முழுவதும் நாசப்படுத்தியது. மேலும், இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மும்பை விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக ஏற்பட்ட மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT