ADVERTISEMENT

ஒடிசாவில் அடுக்கி வைக்கப்பட்ட சடலங்கள்; 7 தமிழர்களின் நிலை?

11:27 AM Jun 04, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் சென்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, கமல், கல்பனா, அருண் ஆகியோரது நிலை என்ன என்று தெரியவில்லை. முன் பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் 7 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களுக்கு உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துள்ள இடத்தில் உடல்களின் பாதுகாப்புக்காக மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இறந்தவர்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார்கள். புகைப்படங்களில் உயிரிழந்தவர்களின் முகங்கள் சிதைந்தும் காணப்படுகிறது என உடல்கள் வைக்கப்பட்டு இருந்த இடங்களை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து தங்கள் மாநில மக்கள் உள்ளனரா என ஆய்வு செய்கிறார்கள். பாலசோர் மாவட்டத்தில் இரு இடங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துள்ளார்கள். பெரிய அரங்கு ஒன்றிலும் பாலசோர் மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளிலும் உடல்களை வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT