ADVERTISEMENT

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை; பக்தர்களுக்கு பிரம்பு வழங்க தேவஸ்தானம் முடிவு

05:49 PM Aug 14, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பிரம்பு ஒன்று வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

இன்று மலைப் பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது பக்தர்களின் பார்வையில் மற்றொரு சிறுத்தையின் நடமாட்டத்தைப் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டிற்குள் ஓடியுள்ளது. முன்னதாக திருப்பதி மலைப் பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்லத் தடை விதித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT