​ animal

Advertisment

கோவையில் 5-வதுநாளாகசிறுத்தை ஒன்றுவனத்துறைக்குப்போக்குகாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர்பகுதியில் உள்ளகுடோன்ஒன்றில் சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அந்தகுடோனில்சிறுத்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையைக் கூண்டுவைத்துபிடிக்க வனத்துறை முயற்சி எடுத்து வரும் நிலையில், கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை சுதாரித்துக்கொண்டு கூண்டில் வைக்கப்பட்டுள்ள உணவைசாப்பிடாமல் சென்றுவிடுகிறது. எந்த ஒரு உணவும் இல்லாமல் குடோனுக்கு உள்ளேயே சிறுத்தைசுற்றிவருகிறது. 6கேமராக்கள்பயன்படுத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். சிறுத்தையைப் பிடித்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.