ADVERTISEMENT

25 ரூபாய்க்கு திருப்பதி லட்டு... முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு!

07:56 AM May 28, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


இந்த ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், அரசு அலுவலங்கள், கோயில்கள் முதலியன கடந்த 50 நாட்களாக மூடியிருந்தன. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகளால் படிப்படியாக அவைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT


இதனால் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் திறக்கப்படவில்லை. திருப்பதி கோயில் திறக்கப்படாததால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் கூறிய நிலையில், லாக் டவுன் முடியும்வரை திருப்பதி லட்டை பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்குத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்டு தற்போது மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தேவஸ்தானம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் லட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன் லைனில் புக் செய்து அருகில் உள்ள திருப்பதி தேவஸ்தான மண்டபங்களில் லட்டுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT