ADVERTISEMENT

ஓடும் ரயிலில் ''கிக்கி சேலன்ஞ்'' செய்த இளைஞர்களுக்கு துப்புரவு தண்டனை

12:20 PM Aug 10, 2018 | vasanthbalakrishnan

அண்மைக்காலமாக ''ஃபீல் மை ஹார்ட்'' ஈன்ற பெயரில் இளைஞர்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே காரின் டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி திரும்பவும் காரில் ஏறும் கிக்கி சேலன்ஞ் எனும் அபாயகர நடன முறை பிரபலமாகி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுபோன்ற நடனத்தில் ஆண்கள் மட்டுமின்றி பல இளம்பெண்களும் ஓவர் கான்பிடென்சில் இறங்கி உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது. இந்த வினோத முறையினை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் இந்த அபாய நடனம் வெளிநாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. கிக்கி சேலன்ஞ் என்ற பெயரில் இளைஞர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி நடனமாடி அதை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் மூன்று இளைஞர்கள் வசாய் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்கி ''கிக்கி சேலன்ஞ்'' செய்து அதை வீடியோ எடுத்து போட்டுள்ளனர். அந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். அந்த மூன்று நபர்களும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு வசாய் ரயில் நிலைய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் அந்த மூன்று இளைஞர்களும் காலை 11 மணிமுதல் 2 மணிவரையும், மாலை 3 முதல் 5 மணிவரையும் மூன்று நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT