
பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த மாணவிகள்இரண்டு பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட நேதாஜி தெருவைச்சேர்ந்த கோவிந்தராஜ். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பரங்கிப்பேட்டை அருகே வேலைக்குராயன்பேட்டை கடற்கரையில் குடும்பத்துடன் குளித்துள்ளார். இதில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மூத்த மகள் அனுஸ்ரீ (18), இரண்டாவது மகள் சிதம்பரத்தில் அரசு பள்ளியில் +1 படிக்கும் மாணவி அட்ஷயா (15) ஆகிய இருவரும் குளித்துள்ளனர். அப்போது மாணவிகள் இருவரும் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு பலியானார்கள். இதில் அட்சயா உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவி அனுஸ்ரீ உடலை பரங்கிப்பேட்டை தீயணைப்புதுறையினர்மற்றும் ஊர் மீனவர்கள் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)