ADVERTISEMENT

"சட்டவிரோதமானவை. கிரிமினல் உள்நோக்கம் கொண்டவை" கேரள ஆளுநரின் அதிரடி பேச்சு...

01:21 PM Jan 02, 2020 | kirubahar@nakk…

நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை பெற்றுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் செல்லாது என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய கேரள சட்டசபை கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எந்த மாநில அரசும் இந்த தீர்மானத்தை ஏற்கமுடியாது என கூறவோ, குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிக்கவோ அதிகாரம் இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த தீர்மானம் குறித்து பேசியுள்ள கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது, "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து கிடையாது. குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. எனவே, இதில் மாநில அரசு முடிவெடுக்க எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை. கண்ணூரில் 80-வது இந்திய வரலாற்று மாநாட்டில் நான் பங்கேற்று சிஏஏ குறித்துப் பேசியபோது, எனக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்திய வரலாற்று மாநாடு சில பரிந்துரைகளை மாநில அரசுக்கு வைத்திருந்தது. அதில் மத்திய அரசுக்கு இணங்கிச் செல்லாதீர்கள் என்று கூறியிருந்தது. இதுபோன்ற பரிந்துரைகள் ஒட்டுமொத்தமாக சட்டவிரோதமானவை. கிரிமினல் உள்நோக்கம் கொண்டவை" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT