ADVERTISEMENT

"தலைச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது"- வெங்கையா நாயுடு பெருமிதம்!

11:23 AM Jun 10, 2019 | santhoshb@nakk…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீசத்திய சாய் நிறுவனத்தின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து பேசினார். இந்தியா மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். அது கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க உறுதி செய்யும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது. சிறப்பான கல்வியை அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் தேசிய கல்வி கொள்கையின் அறிக்கை உள்ளது . அந்த வரைவு அறிக்கை, தேசிய தேவை, நமது பண்பாடு, உலக அளவில் சிறப்பான மாணவர்களை உருவாக்க வேண்டிய தேவை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்கி இருக்கிறது. இதில் தாய் மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பன்மொழி உலகில் பிற மொழிகளில் உள்ள அறிவுத்திறமையை முன்னெடுப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா இன்று இளம் இந்தியாவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் பேரும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேரும் உள்ளனர்.

இதுவரை கிடைக்கப் பெறாத வாய்ப்புகளை இந்த கல்வி கொள்கை வழங்குகிறது. இது கல்வித்துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 21-வது நூற்றாண்டுக்கு தேவையான திறன், அறிவாற்றல், மனநிலையை ஏற்படுத்தும் வகையில் நமது கல்வி முறை சீரமைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார். நாட்டின் அனைத்து தரப்பினரும், இந்த கல்வி கொள்கையின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் குறித்து அனைவரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும்.

நமது அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் சீர்திருத்தம் செய்வதால், நமது பொருளாதாரம் வலுவானதாகவும், எதையும் தாங்கக்கூடியதாகவும் மாறியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தலைச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நமது ஊக்கத்துடன் கூடிய வளர்ச்சியை மேலும் முடுக்கி விட வேண்டும். அதன் மீது மிக முக்கியமான கவனத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். இதில் நாம் தோல்வியடைவே கூடாது. நமது ஒட்டுமொத்த கல்வியை சீரமைப்பது குறித்து சிந்திக்க, புதிய விஷயங்களை கண்டுபிடிக்க இது சரியான தருணம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT